Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விசேட நிபுணத்துவப்பொறிமுறையொன்றை நிறுவுங்கள் | சர்வதேச மன்னிப்புச்சபை 

September 11, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை சர்வதேச சமூகம் விசாரணை செய்ய வேண்டும் | சர்வதேச மன்னிப்புச்சபை

ஜெனிவாவில் 12 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரின்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடிய கரிசனைக்குரிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் விசேட நிபுணத்துவப்பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கை பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தோற்றம்பெற்றுள்ள மனித உரிமைகள்சார் நெருக்கடிகள், மக்கள் போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு, உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்படாமை ஆகிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வகிபாகம் எத்தகையதாக அமையவேண்டும் என்றும் அதில் விளக்கமளித்திருக்கின்றது.

அதன்படி ’12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றை உரியவாறு பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும் வலுப்படுத்துமாறும் இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் விசேட நிபுணத்துவப் பொறிமுறையொன்றை நிறுவுமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்’ என்று அவ்வறிக்கையில் மன்னிப்புச்சபை தெரிவித்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலைவரத்தின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கமைய இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

இலங்கை அதன் சர்வதேசக்கடப்பாடுகளிலிருந்து மேலும் பின்வாங்குவதைத் தடுப்பதற்கு இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான கண்காணிப்பையும் அறிக்கையிடலையும் மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, எனவே அதன் முதற்கட்டமாக இலங்கை தொடர்பில் வருடாந்தம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கூடிய விசேட நிபுணத்துவப்பொறிமுறையொன்றை நிறுவக்கூடிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

Previous Post

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் உள்ளகப்பொறிமுறையை வலியுறுத்தியதாம் இலங்கை  பிரதிநிதிகள் குழு 

Next Post

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை

Next Post
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

மகளிர் தெற்காசிய கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பூட்டானிடம் பணிந்தது இலங்கை

May 29, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

அநுராதபுரத்தில் சிறுமி துஷ்பிரயோக வழக்கு ; பொலிஸார் பாரபட்சம் | தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு

May 29, 2026
முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவுக்கு பிடியாணை

பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரை கைது செய்ய உத்தரவு!

May 29, 2026
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

இனப்படுகொலை நினைவுகூரல்கள் குறித்து ஜனாதிபதி மௌனம் காப்பது ஏன்? – சர்வஜன அதிகாரம் கட்சி

May 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures