மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் வானம் கொட்டட்டும். தனா இயக்கத்தில், விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். விக்ரம் பிரபுவின் தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷூம், இவர்களின் பெற்றோர்களாக சரத்குமார் – ராதிகா நடித்துள்ளனர். இவர்களுடன் நந்தா, சாந்தனு, அமித்ஷா பிரதான் ஆகியோரும் இணைந்துள்ளனர்.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. இறுதி கட்ட பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. 2020 ஜனவரியில் படம் வெளியாகிறது.