Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் வீதிகளில் நடமாடும் யானைகள்

December 25, 2018
in News, Politics, World
0

வவுனியாவில் இரவு பயணங்களின் போது வீதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சாரதிகளும், பயணிகளும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் செல்லும் வீதிகளில், வீதியின் நடுவே நடமாடும் யானைகளால் வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் பதற்ற நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக இரவு வேளைகளில் பயணம் செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், இரவில் பயணம் செய்ய முடியாதநிலை காணப்படுவதாக பயணிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இப்பகுதிகளில் அண்மைக் காலங்களில் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், யானைகள் வேறு பகுதியிலிருந்து குறித்த பகுதிக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் யானைகளின் நடமாட்டத்தைக் குறைத்து, பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வேண்டும் என வாகனச்சாரதிகள் மற்றும் பயணிகள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Previous Post

கிளிநொச்சியை சென்றடைந்தார் நாமல்

Next Post

கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள்

Next Post

கிண்ணியா பாலத்திற்கு வீதி மின்விளக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures