வலி.வடக்கில் பாதுகாப்புத் தரப்பினர் வசமிருந்து மேலும் 33 ஏக்கர் காணி மற்றும் நல்ல நிலை யிலுள்ள மக்களின் வீடுகள் என்பன சில தினங்களில் விடுவிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிருந்து சில நூறு மீற்றர்கள் தொலைவில், வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் ஆரம்பமாகியிருந்தது. காங்கேசன்துறை வீதியின் கரையோரமாக, அந்தப் பகுதியில் இராணுவத்தினர் தொடர்ந்தும் நிலை கொண்டிருந்தனர்.
33 ஏக்கர் நிலப்பரப்பை விடுவிக்கும் முகமாக, அந்தப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வேலிகளை அகற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.இந்தப் பகுதியினுள், நல்ல நிலையில் சுமார் 16 வீடுகள் வரையில் காணப்படுகின்றது. 40 குடும்பங்களுக்குச் சொந்தமான காணியும் இதனூடாக விடுவிக்கப்படவுள்ளது.











