தனுஷ், வெற்றி மாறன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்து உருவாக்கி உள்ள படம் வட சென்னை. இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ள நிலையில் வட சென்னை படக்குழுவினரின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது.
தனுஷ் பேசியதாவது : ஒரே படமாக வட சென்னையை சொல்ல முடியாது, அதனால் தான் மூன்று பாகங்களாக உருவாக்குகிறோம். முதல்பாகம் தற்போது ரிலீஸாகிறது. இரண்டாம் பாகத்திற்கான 20 சதவீத காட்சிகள் இப்போதே உள்ளன. அடுத்தாண்டு இரண்டாம் பாகம் தொடரும். அதற்கு முன்னதாக நானும், வெற்றிமாறன் வேறு ஒரு படத்திற்காக இணைகிறோம். அடுத்தவாரம் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது என்றார்.