Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்!

December 25, 2017
in News, Politics
0
வடக்கு முதலமைச்சரின் உத்தரவை உதாசீனம் செய்த பொலிஸார்!

வட மாகாண முதலமைச்சரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட உத்தரவு உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து இன்று முதல் பேருந்துகள் சேவையில் ஈடுபட வசதியாக பழைய பேருந்து நிலையத்தினை மூடிவிடுமாறு வட மாகாண முதலமைச்சரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இன்றிலிருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட வேண்டும் என வட மாகாண முதலமைச்சரினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், இது வரைகாலமும் இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபட்டு வந்த நகரசபைக்கு சொந்தமான பகுதியை தனியார் வாகனங்கள் சென்று வருவதற்கு மாத்திரம் அனுமதி வழங்கும் வகையிலும், பேருந்துகள் உட்செல்லாத வகையிலும் 24ஆம் திகதி நள்ளிரவு முதல் மூடுமாறு வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு முதலமைச்சர் கடிதம் மூலம் அறிவித்திருந்தார்.

எனினும், பழைய பேருந்து நிலையம் நேற்று நள்ளிரவு முதல் மூடப்படாமல் காணப்பட்டதுடன் பொலிஸார் மற்றும் வவுனியா நகரசபை செயலாளர் உட்பட்ட உத்தியோகத்தர்கள் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மேலும், தமக்கு பேருந்து நிலையத்தினை மூடுமாறு உத்தரவு வரவில்லை எனவும், அவ்வாறு மூடும் பட்சத்தில் தாம் பாதுகாப்பு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழலில் பழைய பேருந்து நிலைய பகுதிக்கு வருகை தந்த வவுனியா தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி வவுனியா நகரசபை செயலாளரிடம் நகரசபையினால் பேருந்து நிலையத்தினை மூடுங்கள் என தெரிவித்த போதிலும் அவ்வாறான உத்தரவு தமக்கு கிடைக்கவில்லை எனவும், முதலமைச்சர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கே உத்தரவு இட்டுள்ளதாகவும் நகரசபை செயலாளர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் உத்தரவை பொலிஸார் கடைப்பிடிக்காமையினால் வழமைபோன்றே இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்திருந்தது.

Previous Post

மு.கா. வேட்பாளர்களின் வீடுகளுக்கு தாக்குதல்!

Next Post

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

Next Post
கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

கட்டுநாயக்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகில் மிகப் பெரிய விமானம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures