Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு, கிழக்கு மக்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்

February 8, 2018
in News, Politics, World
0

“வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ்பேசும் மக்களின் தாயக பூமி. இந்த மண் எமக்கே உரித்தானது. இந்த மண்ணை ஆண்டவர்கள் நாம். மீண்டும் இந்த மண்ணை நாம் ஆளவேண்டும். எனவே, எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் ஓரணியில் திரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ‘வீடு’ சின்னத்துக்கு நேரே புள்ளடி இடவேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.“எமது தாயக மண்ணை மீட்பதற்காக தமிழ்ப்பிள்ளைகளான தமிழீழ விடுதலைப்புலிகள் நடத்திய உன்னத போராட்டத்தையும், அவர்களின் தியாகத்தையும் நாம் மறந்திடலாகாது” எனவும் அவர் தெரிவித்தார்.

“தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் 2002ஆம் ஆண்டு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற பேச்சின்போது எட்டப்பட்ட இணக்கப்பாடே எமது இலக்கு. அதை அடைவதை நோக்கியே நகர்கின்றோம். அதற்காகவே நாம் எத்தனங்களை மேற்கொள்கின்றோம்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று ரீதியிலான வாழ்விடப்பகுதிகளில் உள்ளக சுயநிர்ணய உரிமைக் கொள்கையின் பிரகாரம் சமஷ்டிக் கட்டமைப்பின் அடிப்படையிலமைந்த தீர்வொன்றை ஆராய்தல் என்பது ஒஸ்லோ இணக்கப்பாடு. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை அரசுக்குமிடையில் இது எட்டப்பட்டிருந்தது.

எமது தேர்தல் அறிக்கையிலும் ஒஸ்லோ இணக்கப்பாட்டை நாம் வலியுறுத்தியுள்ளோம். இதுவே எமது இலக்கு. அதனை அடைவதற்கு நாம் எத்தனங்களை மேற்கொள்கின்றோம்.

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை வெளிவந்துள்ளது. அதில் சில முன்னேற்றம் இருக்கின்றது. சில விடயங்களில் இன்னமும் முன்னேற்றம் வேண்டும். சில விடயங்கள் சம்பந்தமாக பேச்சு நடத்தி முடிவெடுக்கப்படவேண்டும்.

வடக்கு – கிழக்கு இணைப்பைப் பற்றி இன்னமும் இறுதி முடிவெடுக்கப்படவில்லை. வடக்கு – கிழக்கு இணைப்புச் சம்பந்தமாக மூன்று விடயங்கள் இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் பேசப்படவேண்டும். பேசி முடிவுக்கு வரவேண்டும். அந்த முடிவு எமது மக்களுக்கு ஏற்றதாக இருக்கவேண்டும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் எந்தத் தீர்ப்பை வழங்கப்போகின்றார்கள் என்று தென்னிலங்கை ஆட்சியாளர்களும், சர்வதேச சமூகமும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்கள் தங்களது கோரிக்கையை ஒருமித்து முன்வைத்தால், எங்களது கரங்கள் பலப்படுத்தப்படும்” – என்றார்.

Previous Post

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவருக்கும் தாரை வார்த்துக் கொடுக்க முடியாது

Next Post

மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது

Next Post

மீள்குடியேற்றத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 60 வீதம் திருப்பியனுப்பப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

குஜராத் டைட்டன்ஸை சகல துறைகளிலும் விஞ்சிய  றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு  சம்பியன் பட்டத்தை தக்கவைத்தது 

June 1, 2026
சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

சென்னையில் கொடூரம்: களியாட்ட விடுதி தகராறில் கார் மோதி இலங்கைத் தமிழ் அகதிப் பெண் உயிரிழப்பு!

June 1, 2026
சிறுமி பாலியல் பலாத்காரம்! பிணையில் சென்ற பல்லேகம ஹேமரதன தேரர்

தேரருக்கு பிணை வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

June 1, 2026
பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

பௌத்த பிக்குகள் தொடர்பான விவகாரங்களுக்கு சங்க நீதிமன்றம் அவசியம் – ஞானசார தேரர்

June 1, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures