Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வடக்கு- கிழக்கு அபிவிருத்திக்காக ஜனாதிபதி சிறப்புச் செயலணி!!

June 8, 2018
in News, Politics, World
0

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அர­சி­தழ் கடந்த 4ஆம் திகதி அரச தலை­வ­ரின் பதில் செய­லர் சுமித் அபே­சிங்­க­வி­னால் வெளி­யி­டப்­பட் டுள்­ளது.

வடக்கு அபி­வி­ருத்­திக்­காக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், அரச அதி­கா­ரி­களை உள்­ள­டக்­கிய சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல கத்­தில் நடை­பெற்ற நிகழ்­வில் உரை­யாற்­றும்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

இதன் பின்­னர் கடந்த மார்ச் மாதம் முற்­ப­கு­தி­யில் மட்­டக்­க­ளப்­பில் உரை­யாற்­றிய அரச தலை­வர், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­கான செய­லணி அமைக்­கப்­ப­டும் என்று கூறி­யி­ருந்­தார்.இவ்­வா­றா­ன­தொரு நிலை­யில் வடக்கு – கிழக்க மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திக்­காக அரச தலை­வர் சிறப்­புச் செய­லணி அமைக்­கப்­பட்­டுள்­ளது. 48 பேர் உறுப்­பி­னர்­க­ளாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ள­து­டன், இதன் செய­ல­ராக வே.சிவ­ஞா­ன­சோதி நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

‘போரின் பின்­னர் வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் இது­வரை முன்­னெ­டுக்­கப்­பட்ட அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை மீளாய்வு செய்­வ­தற்­கா­க­வும் மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­க­வும் அர­சால் ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி வேலை­க­ளுக்­கான வழி­காட்­டல்­கள் மற்­றும் ஆலோ­ச­னை­களை வழங்­க­வேண்­டும் என்­பது எனக்கு தெரிய வந்­துள்­ள­தா­லும் தேசிய ஒற்­றுமை மற்­றும் ஒரு­மைப்­பாடு, சம­நி­லைப் பொரு­ளா­தார மற்­றும் சமூக ரீதி­யி­லான வரு­மா­னத்­தின் விருத்­திக்­காக அபி­வி­ருத்­திச் செயற்­பாட்­டின் மூலம் அணு­கு­வது இன்­றி­மை­யா­த­தெ­னக் கரு­தப்­ப­டு­வ­தா­லும் இந்­தச் செய­ல­ணியை நிய­மிக்­கின்­றேன்’ என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால அர­சி­த­ழில் தெரி­வித்­துள்­ளார்.

அரச தலை­வ­ரி­னால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள செய­ல­ணி­யின் உறுப்­பி­னர்­கள், வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­திப் பணி­களை நெறிப்­ப­டுத்­தல், கூட்­டி­ணைத்­தல் மற்­றும் தொட­ராய்வு செய்­தல் வேண்­டும்.

செய­ல­ணி­யின் பணி­க­ளாக 7 விட­யங்­க­ளும் அரச தலை­வ­ரால் பட்­டி­யல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வடக்கு – கிழக்கு மாகா­ணங்­க­ளில் தற்­போது செயற்­ப­டுத்­தப்­ப­டும் பல்­து­றை­சார் நிகழ்ச்­சித் திட்­டங்­கள் மற்­றும் கருத்­திட்­டங்­க­ளின் முன்­னேற்ற நில­மையை மீளாய்வு செய்­தல்.

முன்­னு­ரிமை அவ­தா­னம் தேவைப்­ப­டும் துறை­கள் மற்­றும் குழுக்­களை இலக்கு வைக்­கும் புதிய திட்­டங்­களை முன்­னெ­டுத்­த­லும் நிதி வளங்­களை அளித்­த­லும்.

மாகா­ணங்­க­ளின் அனைத்து அபி­வி­ருத்­திச் செயற்­திட்­டங்­க­ளி­லும் தேவை­யான போது தலை­யி­டு­தல், வழி­காட்­டு­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளில் முத­லீடு செய்து நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக தனி­யார் துறை மற்­றும் பல்­த­ரப்பு அபி­வி­ருத்தி நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வை­யும் பங்­கேற்­பை­யும் ஊக்­கு­வித்­த­லை­யும் பெற்­றுக்­கொள்­ளல்.

அர­சுக்­கும் மாகாண நிறு­வ­னங்­க­ளுக்­கும் இடை­யே­யும் அரச மற்­றும் தனி­யார் துறை­க­ளுக்கு இடை­யே­யும் மற்­றும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள், சிவில் சமூ­கத் துறை­க­ளுக்கு இடை­யே­யும் பணி­களை ஒருங்­கி­ணைப்­புச் செய்­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­க­ளின் நடை­மு­றைப்­ப­டுத்­தல் பற்­றிய ஒட்­டு­மொத்த கண்­கா­ணிப்பை நிறை­வேற்­று­தல்.

மாகா­ணங்­க­ளின் அபி­வி­ருத்­தித் திட்­டங்­களை துரி­மாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு தடை­யாக இருக்­கின்ற ஏதே­னும் தடை­களை இனங்­கண்டு, அவற்­றைத் தவிர்த்­துக் கொண்டு, துரித தீர்­வு­கள் தொடர்­பாக உரிய அதி­கா­ரி­க­ளுக்கு அறி­வுரை வழங்­கல், என்­பன குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.

இந்­தச் செய­லணி உரிய பணி­களை முன்­னெ­டுக்க சகல உத­வி­க­ளை­யும் சகல தக­வல்­க­ளை­யும் வழங்­க­வேண்­டும் என்று அரச பணி­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் அரச தலை­வர் பணிப்­புரை விடுத்­துள்­ளார்.

Previous Post

ஜனாதிபதி மாளிகையில் விசேட இப்தார் நிகழ்வு

Next Post

ரங்கே பண்டாரவின் மகன் வைத்தியசாலையில் கைது

Next Post

ரங்கே பண்டாரவின் மகன் வைத்தியசாலையில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

பிரபல ரெப் பாடகர் ‘மதுவா’வுக்கு வெடிபொருட்களை வழங்கிய வழக்கு ; மற்றுமொரு ரெப் பாடகர் கைது!

கனடாவில் இலங்கை வைத்தியர் பாரிய குற்றச்சாட்டுகளில் கைது!

July 23, 2026
லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

லங்கா பிரீமியர் லீக் தொடரிலிருந்து விலகினார் குசல் மெண்டிஸ் !

July 23, 2026
தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

தமிழ்தேசியத்தின் எழுச்சியாக Tamils Day… பாடத்தை உணர்த்தும் காலத்தின் எச்சரிக்கை… கிருபா பிள்ளை

July 22, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

மது அருந்தி வாகனம் செலுத்திய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட டேவிட் வோர்னர்

July 22, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures