போர்த்துக்கல் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் 30 நாட்கள் விளையாடத் தடை விதித்துள்ளதுடன், அவருக்கு 255 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள தெரிவித்துள்ளன.
நோர்வே அணிக்கு எதிரான போட்டி ஒன்றில் ரொனால்டோ மாற்று வீரராக அமர வைக்கப்பட்டார். போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்த்து அவர் பயிற்சியில் ஈடுபட்டபோதும், இறுதியில் களமிறக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவர், டென்மார்க் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கோபன்ஹேகனில் இருந்த போர்த்துக்கல் அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார்.
இந்த விவகாரம் தொடர்பாக போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கி விசாரணை நடத்திய நிலையில், தேசிய அணியின் முகாமிலிருந்து வெளியேறியது விதிமீறல் எனக் கருதப்பட்டதால், ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், 255 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.













