தமிழ் நடிகையான ரெஜினா, ஹிந்தியில் ஏக் லடுக்கி கோ டெக்கா டு ஐசா லகா என்ற படத்தில் நடித்தார். பிப்ரவரி 1ந்தேதி அப்படம் வெளியானது. அந்த படத்தில் சோனம் கபூருடன் இணைந்து ஓரினச்சேர்க்கையாளர் வேடத்தில் நடித்திருந்தார் ரெஜினா.
இதுப்பற்றி சோனம்கபூர் அளித்துள்ள ஒரு பேட்டியில் ரெஜினா குறித்து கூறுகையில், ரெஜினா ஒரு கூலான பெண். நல்ல நடிகை. நானும், அவரும் இந்த படத்தில் காதலித்து மகிழ்ந்தோம். அவருடன் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்திருப்பவர், இந்தப்படம் ரெஜினாவிற்கு ஹிந்தியில் நல்ல அறிமுகத்தைக் கொடுத்துள்ளது. அவரது சிறப்பான நடிப்பு அடுத்தபடியாக அவருக்கு சில ஹிந்தி வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.