ஒவ்வொரு ஆண்டும் காதலர் தின ஸ்பெசலாக பாடல்களை வெளியிட்டு வரும் இசையமைப்பாளர் அனிருத், இந்த ஆண்டு காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று தான் இசையமைத்துள்ள ஜெர்ஸி படத்தில் இடம் பெற்றுள்ள மறக்கவில்லையே பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார்.
நானி – ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள இந்தபடம் ஏப்ரல் 19-ந்தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.