ரயில் விபத்தில் இரு கால்களை இழந்த இளம்பெண்: மருத்துவமனையில் உயிரிழப்பு

ரயில் விபத்தில் இரு கால்களை இழந்த இளம்பெண்: மருத்துவமனையில் உயிரிழப்பு

கனடா நாட்டில் ரயில் விபத்தில் இரண்டு கால்களை இழந்த இளம்பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாண்டீரியல் நகரை சேர்ந்த Sarah Stott (22) என்ற இளம்பெண் கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 8ம் திகதி ரயில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

இந்த விபத்தில் அவரது இரண்டு கால்களும் சேதம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சையின்போது இடுப்பு வரை ஒரு காலும், முழங்கால் வரை மற்றொரு காலும் அறுவை சிகிச்சையின் மூலம் நீக்கப்பட்டது.

இச்சம்பவத்தை தொடர்ந்து அவர் பணிபுரிந்து வந்த நிறுவனம் அவருக்காக சுமார் 1,00,000 டொலர் நிதியை திரட்டியுள்ளது.

இந்த தொகை மூலம் ஊனமடைந்தவர்கள் ஓட்டக்கூடிய கார் ஒன்று அவருக்கு அளிக்கப்பட்டது. இதனால் இயல்பு நிலைக்கு திரும்பிய அவர் மகிழ்ச்சியாக நாட்களை கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஒட்டாவா மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்னர் சேர்க்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென உயிரிழந்துள்ளார். எனினும், அவர் உயிர் எவ்வாறு பிரிந்தது என்ற தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

மேலும், Sarah Stott உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவரது குடும்பத்தினர் ஊடகங்களை சந்திக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News