Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரணிலுக்கு ஆதரவு வழங்கும் 92 எம்.பிக்களுக்கும் எதிராக ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்க வேண்டும்

August 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அதிபர் – ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு உடன்தீர்வை வழங்குக| இராதாகிருஷ்ணன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியாக ஆதரவளிப்பதற்கு கட்சி எடுத்த முடிவுக்கு மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை அனுமதி வழங்கியுள்ளது.

மலையக மக்கள் முன்னணியின் தேசிய சபை இன்று சனிக்கிழமை (10) தலவாக்கலையில் தனியார் கலாச்சார மண்டபத்தில் கூடியது.

கட்சி தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், பிரதித் தலைவருமான ஆர்.இராஜாராம், மலையக தொழிலாளர் முன்னணியின் செயலாளர் புஷ்பா விஷ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகி பாலச்சந்திரன், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட இராதாகிருஷ்ணன் எம்.பி. கூறியவை வருமாறு,

“ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சஜித் பிரேமதாசவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி 47 கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அவற்றை சஜித் பிரேமதாச ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு நாம் ஆதரவு தெரிவித்துள்ளளோம்.

மேற்படி கோரிக்கைகளில் வீடமைப்பு காணி உரிமை, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.

மலையக மக்களுக்கு 1988 இல் ரணசிங்க பிரேமதாச ஆட்சிகாலத்தில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரே அவர்களால் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்குரிய வாய்ப்பு கிட்டியது. அதற்கு முன்னர் எல்லா வழிகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டன. பிரேமதாசவின் இந்த நடவடிக்கையால்தான் மலையகத்தில் மாற்றம் ஏற்பட ஆரம்பித்தது.

எனவே, அதற்கான நன்றி கடனாகவும் நாம் சஜித்தை ஆதரிக்க வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும், நாட்டில் நல்லாட்சியே இடம்பெறவேண்டும், அதனை சஜித் பிரேமதாச செய்வார் என்ற நம்பிக்கையும் உள்ளது. ரணில் விக்கிரமசிங்கவால் ஊழலை ஒழிக்க முடியாது. ஏனெனில் கள்ளவர்கள் எல்லாம் இன்று அவர் பக்கமே அணிதிரண்டுள்ளனர்.

சஜித் பிரேமதாச கீழ்மட்டத்திலிருந்து வந்தவர், எனவே, அவருக்கு மக்களின் வலி, வேதனை நன்கு புரியும், அதற்கேற்ற வகையில் வகையில் உரிய முடிவுகளை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

அதேவேளை, கட்சி முடிவை மீறி செயற்பட்ட உறுப்பினர்களுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்தது. இதனால் ஹரின் பெர்ணான்டோ, மனுச நாணயக்கார ஆகியோர் எம்.பி. பதவியை இழந்துள்ளனர்.  ராஜபக்சவின் சகாக்கள் இன்று ரணிலுடன் உள்ளனர், எனவே, ரணிலுக்கும், ராஜபக்சவுக்கும் டீல் இல்லையெனில் மொட்டு கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு வழங்கும் எம்.பிக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சவால் விடுக்கின்றேன்.” – என்றார்.

Previous Post

சுமந்திரனை சந்தித்தார் நாமல் !

Next Post

 10 இலட்சம் ரூபாவை வெல்லப்போவது றினோன் கழகமா? நியூ ஸ்டார் கழகமா?

Next Post
பிற்போடப்பட்டது சுப்பர் லீக் கால்பந்தாட்டத் தொடர்

 10 இலட்சம் ரூபாவை வெல்லப்போவது றினோன் கழகமா? நியூ ஸ்டார் கழகமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures