‛பிரண்ட்ஸ்’, ‛பாஸ் என்கிற பாஸ்கரன்’ படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. உடல்நலம் பாதிக்கப்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கன்னட சினிமாவில் தனக்கு ஏற்பட்ட அவலங்களை வீடியோவாக பதிவிட்டார்.
அவருக்கு யாரும் முன்வராத நிலையில் ரஜினியிடம் உதவி கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், திருநெல்வேலி தான் எனது சொந்த ஊர். தமிழ்ப் படங்களில் நடிக்க சென்னை வந்தேன். சரியான வாய்ப்பு இல்லாததால் பெங்களூரு சென்றேன்.
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் வருமானம் இன்றி கஷ்டப்படுகிறேன். யாருமே உதவவில்லை. ரஜினிகாந்தை சந்திக்க விரும்கிறேன். எப்படி சந்திப்பது என தெரியவில்லை. அவரை சந்திக்க ரசிகர்கள் உதவி செய்யுங்கள். ரஜினி நிச்சயம் உதவுவார் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.
விஜயலட்சுமியின் குமுறல் ரஜினியை எட்டியுள்ளது. அவரை தொடர்பு கொண்ட ரஜினி, தேவையான உதவிகளை செய்வதாக கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.
அதில், ரஜினி மிகவும் அன்பாக பேசினார். எதற்கும் பயப்பட வேண்டாம். தேவையான உதவியை செய்வதாக சொன்னார். அவரின் வார்த்தை உற்சாகத்தையும், நம்பிக்கையையும் தந்தது. சிறந்த மனிதாபம் மிக்க மனிதரான அவர் தான் நம்முடைய தலைவராக இருக்க வேண்டும். ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களுக்கும், ரஜினிக்கும் நன்றி என கூறியுள்ளார்.