யோகி படத்தில் அறிமுகமான யோகிபாபு, அதன்பின் படிப்படியாக வளர்ந்து இப்போது ஹீரோவாக நடிக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அதோடு, அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும், விஜய்யுடன் சர்க்கார் படத்திலும் நடித்த அவர் மீண்டும் விஜய்யுடன், பிகில் படத்தில் நடித்து வருகிறார்.
யோகிபாபு அளித்த பேட்டி ஒன்றில், விஸ்வாசம் படத்தில் நடித்த போது அன்பாக பழகிய அஜித், சினிமா குறித்து சில ஆலோசனைகளையும் வழங்கினார். அதேபோல்தான் விஜய்யும். சர்கார், பிகில் படங்களில் நடித்தபோது நான் நடிக்கும் படங்கள் குறித்து கேட்பார். நான் நடித்ததில் பிடித்த காட்சிகளையும் சொல்லி என்னை தட்டிக் கொடுப்பார். என்னை உற்சாகப்படுத்தும் அஜித், விஜய் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.