மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் வேலைகளை தொடங்கி விட்டார் ஏ.எல்.விஜய். தமிழில் தலைவி, ஹிந்தியில் ஜெயா என இரண்டு தலைப்புகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடக்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், கடந்த சில மாதங்களாகவே தனது பாடிலாங்குவேஜை மாற்றி வருவதோடு, பரதநாட்டியமும் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியோடு தொடங்குகிறது. 100 நடன கலைஞர்களுடன் கங்கனா ரணாவத் பரதநாட்டியமாடும் அந்த பாடல் காட்சியை பிரமாண்ட செட் போட்டு படமாக்குகிறார் ஏ.எல்.விஜய்.