Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலையில் ‘சேர்.பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று, கட்புலக் கலைகள்’ புதிய பீடத்தை ஆரம்பிக்க வர்த்தமானி  

August 18, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யாழ். பல்கலைக்கழகத்தில் பொலிஸ், இராணுவக் கண்காணிப்பு தீவிரம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் கீழ் இயங்கி வந்த இராமநாதன் நுண்கலைக் கழகம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடமாக (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts)த் தரமுயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த அறிவித்தல் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜெயந்தவினால் கடந்த 16ஆம் திகதி கையொப்பமிடப்பட்டு,  அதிசிறப்பு வர்த்தமான அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. 

இராமநாதன் நுண்கலைக் கழகமானது, 1960 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி  முன்னாள் தபால் மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் சு. நடேசபிள்ளையினால், அவரது மாமனாராகிய சேர் பொன்னம்பலம் இராமநாதன் அவர்களின் ஞாபகார்த்தமாக ஆரம்பிக்கப்பட்டது. இராமநாதன் நுண்கலைக் கழகம், இராமநாதன் கல்லூரியுடன் இணைந்ததாக சுன்னாகத்துக்கு சமீபமாக மருதனார்மடத்தில் அமைக்கப்பட்டது.  

தமிழ் தொல்சீர் இசை, பரதநாட்டியம் என்பவற்றை மேம்பாடடையச் செய்தல், தமிழ் பண்பாட்டுப் பேற்றின் தனித்துவம், அடையாளம் என்பவற்றை மேம்படுத்தல் – பரவச் செய்தல் என்பவற்றினூடாகக் கற்றலுக்கான ஓர் அரணாக அமைந்திருக்க வேண்டுமென்பதே இராமநாதன் நுண்கலைக் கழகம்  அமைக்கப்பட்டதன் நோக்கமாக இருந்தது. 

1974ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆறாம் திகதி இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது வளாகமாக யாழ்ப்பாண வளாகம் உருவாக்கப்பட்ட தொடக்க நிகழ்வின் போது இராமநாதன் நுண்கலைக் கழகமும் பல்கலைக்கழக முறைமைக்குள் உள்ளீர்ப்பு செய்யப்படுதல் வேண்டும் என்பதை  இலங்கைக் குடியரசின் பிரதமர் திருமதி சிறிமாவோ ரத்வத்தே டயஸ் பண்டாரநாயக்காவும், அப்போதைய கல்வி அமைச்சரும், இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய கலாநிதி அல்ஹாஜ் பதியுதின் மொகமட்டும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டனர். 

வட பிராந்தியத்தின் கலை, பண்பாடுகளைப் பாதுகாப்பதற்கும், முன்னேற்றுவதற்கும், தமிழ்மொழியை மேம்பாடடையச் செய்வதற்கும்,இந்தத் துறைகளில் ஆழமான ஆய்வை உறுதிப்படுத்துதற்குமாகவே இது பற்றி ஆலோசிக்கப்பட்டது. 

1975 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகத்துடன் இராமநாதன் நுண்கலைக் கழகம் இணைக்கபட்டது.  எனினும் அன்று முதல் இன்று வரை அது ‘கழகமாகவே’ இயங்கி வந்தது. 

இராமநாதன் நுண்கலைக்

கழகத்தின் செயற்பாடுகளை மேலோங்கச் செய்வதற்காகவும், சேவைகளை விரிவுபடுத்துவதற்காகவும் அதனை ஒரு உயர்நிலை நிறுவனமாக அல்லது பீடமாக தரமுயர்த்த வேண்டிய தேவையை உணர்ந்ததன் பின்னணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் சேர்ந்து அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவந்தது.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27 (1) ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதந்துரைக்கமைவாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிறேம ஜயந்த்  2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஒப்பமிட்டதன் படி வெளியிடப்பட்ட 2293/22 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி மூலம் “சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் (Sri Ponnambalam Ramanathan Faculty of Performing and Visual Arts) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.  

இந்த அறிவித்தலின் படி, இசைத்துறை, வாத்தியத் துறை, நடனத்துறை, ஓவியத்துறை, சிற்பக்கலைத்துறை, நாடக அரங்கியல் துறை ஆகிய ஆறு துறைகள் உள்வாங்கப்பட்டுள்ளன. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இசை (வாய்ப்பாட்டு, வயலின், வீணை, பண்ணிசை, மிருதங்கம்), நடனம் (பரதநாட்டியம்), சித்திரமும் வடிவமைப்பும், நாடகமும் அரங்கியலும் (நான்கு வருடங்கள்) எனும் நுண்கலைகளுக்கான இளங் கலைமாணிச் சிறப்புப் பட்டங்களை, இந்தப் பட்டப்படிப்பு பாடநெறிகளின் முன்னோடியான இராமநாதன் நுண்கலைக் கழகத்தினூடாக, வழங்கி வந்தது. 

ஒவ்வொரு பாடநெறியாலும் வழங்கப்படுகின்ற இளம் நுண்கலைமாணிப் பட்டங்கள் தொழில் தகைமையுடையனவாகும். இப் பட்டதாரிகள் சமூகத்தின் சவால்களுக்கும், தொழில் சந்தையின் எதிர்பார்ப்புக்களுக்கும் தங்களைத் தயார்படுத்தியவர்களாக இருப்பர். இதனால் இவர்கள் மிகச் சிறந்த முறையில் போதுமான வளங்களுடனும், போட்டித் தன்மையுடனும், தொழிற்றகைமை பெறத்தக்க வகையிலும் பயிற்றுவிக்கப்படுதல் வேண்டும் என்ற நோக்கோடு  தற்போது சேர். பொன்னம்பலம் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புலக் கலைகள் பீடம் உருவாக்கப்பட்டுள்ளது.

Previous Post

கைதுசெய்யப்பட்டார் மேர்வின் சில்வா

Next Post

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

Next Post
பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

பிரபல இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் காலமானார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures