Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

July 28, 2024
in Cinema, News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
யங் ஸ்டார்’ பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

‘கோமாளி’ படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குநராக அறிமுகமாகி, ‘லவ் டுடே’ எனும் படத்தின் மூலம் வெற்றிகரமான நடிகராகவும் அறிமுகமாகி, ரசிகர்களிடத்தில்  பிரபலமான இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. 

காதல் திரைப்படங்களை இயக்குவதில் தனித்துவமான திறமை பெற்ற இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி ஆகியோருடன் அரசியல்வாதியும், இயக்குநரும், நடிகருமான சீமான் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். 

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு, இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் ரசிகர்களை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் எல் ஐ சி எனும் டைட்டில் தான் முதலில் வைக்கப்பட்டிருந்தது. இந்த டைட்டில் சர்ச்சையானதால்.. தற்போது ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என மாற்றப்பட்டு, இப்படம் தயாராகி வருகிறது.

Previous Post

500 கிராம் கேரள கஞ்சாவுடன் திருகோணமலையில் பெண்  கைது

Next Post

சென்னையில் 360 டிகிரி இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

Next Post
போதைப் பொருட்களிடம் இருந்து விலகி இருங்கள் | யுவன்

சென்னையில் 360 டிகிரி இசை நிகழ்ச்சி நடத்தும் யுவன் சங்கர் ராஜா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நிழல் – திரைப்பட விமர்சனம்

நிழல் – திரைப்பட விமர்சனம்

June 15, 2026
பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

பீபா உலகக் கிண்ணப் போட்டியை கடைசி நேரத்தில் சமன் செய்தது ஜப்பான் ; சுவீடன், ஐவரி கோஸ்ட் வெற்றி

June 15, 2026
மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை : நில அடையாளம், இன அரசியல், வாழ்வாதாரம் | நூல் அறிமுகம்

June 15, 2026
ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

ஜூன் 30க்குள் சொத்து, பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்கவேண்டும் – இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவிப்பு

June 15, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures