Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

மோகன்லால் மீது கேரள போலீஸ் சங்கம் முதல்வரிடம் புகார்

April 4, 2019
in Cinema
0

பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள படம் லூசிபர். இந்தப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ரசித்து வருகிறார்கள். படத்தின் சண்டை காட்சியில் மோகன்லால், போலீசாரின் மார்பில் காலை வைத்து உதைக்கும் காட்சிகள் உள்ளது. இந்த காட்சியை போஸ்டராகவும் ஒட்டியிருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள போலீஸ் சங்கம், முதல்வரின் தனிப் பிரிவில் புகார் அளித்துள்ளது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

போலீசாருக்கு இப்போது மக்கள் மத்தியில் மதிப்பும், பயமும் குறைந்து வருகிறது. அதற்கு ஊக்கம் அளிப்பதுபோன்று மோகன்லால் நடித்த சண்டை காட்சி உள்ளது. இது போலீசாருக்கு அவமானத்தை ஏற்படுத்துவதாகும். குற்றவாளிகளே போலீஸ் மீது கை வைக்க பயந்தனர். இப்போது பொதுமக்களே கை வைக்கிற அளவிற்கு திரைப்படங்களில் காட்சிகள் வைக்கப்படுகிறது.

இது இளைஞர்களை போலீசுக்கு எதிராக திருப்பி விடுகிறது. புகையிலை, மது அருந்துவது, போன்ற காட்சிகளில் அப்படிச் செய்வது தவறு என்று வாசகம் இடம்பெறுவது போன்று இனி போலீசாரை தாக்கும் காட்சியில், “போலீசாரை தாக்குவது தவறு” என்ற வாசகம் இடம்பெற வேண்டும். என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Previous Post

சின்னத்திரை தயாரிப்பாளர் ஆன லலிதாகுமாரி

Next Post

செக்மோசடி வழக்கில் சிக்கியது எப்படி? மோகன்பாபு விளக்கம்

Next Post

செக்மோசடி வழக்கில் சிக்கியது எப்படி? மோகன்பாபு விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures