மோகன்லால் நடிப்பில் அடுத்த வெளியாக இருக்கும் படம் ‘லூசிபர்’. நடிகர் பிரித்விராஜ் இயக்கியுள்ள இந்தப்படம் வரும் மார்ச்-28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் மஞ்சு வாரியர், விவேக் ஓபராய், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்திற்காக பிரபல பின்னணிப் பாடகி உஷா உதூப் ‘லூசிபர் ஆந்தம்’ என்கிற பாடலை பாடியுள்ளார்.
இந்தப்படத்தின் கதையை எழுதிய நடிகர் முரளிகோபி தான் இந்தப்பாடலையும் எழுதியுள்ளார். இந்த பாடலுக்கு தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். மலையாளத்தில் 1974 சட்டக்காரி என்கிற படத்தில் முதன்முதலாக பாடிய உஷா உதுப், கடந்த 45 வருடங்களில் பத்துக்கும் மேற்பட்ட மலையாள படங்களில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.