மலையாள சினிமாவில் நடிகரும் கதாசிரியருமான சங்கர ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது ‘பதினெட்டாம்படி’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். முற்றிலும் புதுமுகங்கள் நடித்தாலும் மிகப் பிரபலமான முன்னணி நடிகர்களும், இதில் நடிக்க இருக்கிறார்கள். ஏற்கனவே வித்தியாசமான தோற்றத்துடன் சற்றே நீட்டிக்கப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் மம்முட்டி நடிக்கிறார் என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது..
இந்தநிலையில் இந்தப்படத்தில் ஆர்யா, பிரித்திவிராஜ் மற்றும் டொவினோ தாமஸ் என சில முன்னணி நடிகர்களும் இணைந்து முக்கிய வேடங்களில் சிறப்பு தோற்றங்களில் நடிக்க இருக்கின்றனர்.. ஏற்கனவே மம்முட்டியுடன் போக்கிரி ராஜா என்கிற படத்தில் பிரித்விராஜூம், தி கிரேட் பாதர் என்கிற படத்தில் ஆர்யாவும் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது