நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்து 2017ம் ஆண்டு வெளியான படம் ஹலோ. இந்த படத்தை தமிழில் அலை, யாவரும் நலம், 24 படங்களை இயக்கிய விக்ரம் குமார் இயக்கினார். கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்தார். இப்படம் தெலுங்கில் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் நல்ல விமர்சனங்களை பெற்றது.
இந்தநிலையில், தற்போது ஹலோ படத்தை மலையாளத்தில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில், கல்யாணி பிரியதர்ஷன் நடித்த படம் முதன்முறையாக கேரளாவில் வெளியாகிறது. தற்போது மோகன்லால் நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கி வரும் மரக்கார் அரபிக்கடலின்டே சிம்ஹம் என்ற படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் கல்யாணி பிரியதர்ஷன்.