தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக கோலோச்சி வந்த த்ரிஷாவிற்கு மலையாள திரையுலகில் நடிக்காமல் இருந்தது மட்டுமே ஒரு குறையாக இருந்தது. கடந்த வருடம் வெளியான ஹே ஜூடு என்கிற படத்தில் நடித்ததன் மூலம் அந்தக் குறையும் தீர்ந்தது. இந்த நிலையில் இந்த வருடம் வெளியான பேட்ட படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் மிகப்பெரிய வாய்ப்பையும் பெற்றார் த்ரிஷா.
இதையடுத்து தற்போது மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம் த்ரிஷா.. திரிஷ்யம் படத்தை தொடர்ந்து மோகன்லாலை வைத்து இந்த படத்தை இயக்க இருக்கிறார் ஜீத்து ஜோசப். இதில் மோகன்லாலுக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.. தற்போது கார்த்தி படத்தை இயக்கிவரும் ஜீத்து ஜோசப் அதை முடித்துவிட்டு இந்த படத்தை இயக்கவிருக்கிறாராம்.