சிரஞ்சீவி நடித்துள்ள சரித்திர படம் சைரா நரசிம்ம ரெட்டி. அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, அனுஷ்கா, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். சுதந்திர போராட்ட காலத்து கதையில் உருவாகியுள்ள இந்த படம் அக்டோபர் 2-ந்தேதி வெளியாகிறது.
இப்படம் குறித்து இயக்குனர் சுரேந்தர் ரெட்டி வெளியிட்ட ஒரு செய்தியில், சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் ரியல் ஹீரோ ராம்சரண் என்கிறார். காரணம், இந்த படத்தில் பட்ஜெட்டில் அவர் ஒருபோதும் சமரசம் செய்து கொண்டதில்லை. தேவையான செலவுகளை தாராளமாக செலவிட்டார். அந்தவகையில், இந்த படத்திற்காக அவர் ரூ. 270 கோடி செலவிட்டுள்ளார்.
இந்த படத்தை தனது தந்தை சிரஞ்சீவிக்கு கனவு பரிசாக கொடுத்துள்ளார். இப்படத்தை ரொம்பவே நேசிக்கிறார். இப்படியொரு தயாரிப்பாளரை பார்ப்பது அரிது என்கிறார் சுரேந்தர் ரெட்டி.