தம்பிக்கோட்டை படத்திற்கு பின் தமிழில் மீனாவுக்கு படங்கள் இல்லை. ஆனால் திரிஷ்யம் படத்தில் நடித்த பிறகு மலையாளம், தெலுங்கில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்தநிலையில், முதன் முதலாக கரோலின் காமாட்சி என்ற வெப் சீரிஸில் மீனா நடிக்கிறார்.
இதில் சிபிஐ அதிகாரியாக நடிக்கிறார் மீனா. ஆனபோதும் அவரது கேரக்டர் ரப் அண்ட டப்பாக இல்லாமல், காமெடி வேடத்தில் நடித்தபடி குற்ற செயல்களை அவர் கண்டுபிடிப்பது போன்று அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். மீனாவின் காமெடி காட்சிகள் ஹைலைட்டாக இருக்கும் என்கிறார்கள்.