மூன்று தசாப்பதங்களுக்கு ஒருமுறை இடம் நகரும் பூமி: ஆதாரத்தை வெளியிட்டது கூகுள்!
பூமியானது பல்வேறு பூகோள மாற்றங்களுக்கு உட்பட்டு வருகின்றமை ஆய்வுகளினூடாக நிரூபிக்கப்பட்ட ஒன்றே.
அதேபோன்று பூமியின் நிலப்பரப்பானது இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகின்றமை தற்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது கூகுள் மேப்பின் ஊடாக பெறப்பட்ட புகைப்படங்களை டைம்லேப்ஸ் முறைக்கு உட்படுத்தியதன் ஊடாக சாத்தியமாகியுள்ளது.
அதாவது 1984ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரையான 32 வருட காலப் பகுதியில் செயற்கைக் கோள்களுடன் எடுக்கப்பட்ட 5 மில்லியன் புகைப்படங்கள் இவ்வாறு டைம்லேப்ஸ் முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி குவைத் நாட்டின் பேர்ள் சிட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய், பொலிவியாவின் நுப்லோ டீ சாவேஸ், கனடாவின் அல்பேர்ட்டா, ஆரல் கடல், பெரு நாட்டின் புகால்பா பகுதி என்பன எவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகின்றது என்பது காட்டப்பட்டுள்ளது.