Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

May 17, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி நாளைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார்.

நாட்டில் சுமார் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டில் முடிவிற்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னர், மேமாதம் 11 – 18 ஆம் திகதி வரையான ஒருவாரகாலப்பகுதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாகவும், 18 ஆம் திகதி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளாகவும் தமிழ்மக்களால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான நாளைய தினம் முள்ளிவாய்க்காலை வந்தடையக்கூடியவாறு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அவ்விரு மாகாணங்களிலுமிருந்து பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

அதன்படி இப்பேரணி கிழக்கு மாகாணத்திலிருந்து நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமையும் வடக்கு மாகாணத்திலிருந்து நேற்று திங்கட்கிழமையும் ஆரம்பமானது.

கிழக்கு மாகாணப் பேரணி அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்திலிருந்தும் வடக்கு மாகாணப் பேரணி வல்வெட்டித்துறை அம்மன் ஆலயத்திற்கு முன்பாகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொத்துவில் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான பேரணி திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முறை, களுவாஞ்சிக்குடி ஊடாக திருகோணமலை நோக்கிச்சென்று, அங்கிருந்து முல்லைத்தீவின் முள்ளிவாய்க்காலை வந்தடையும்.

அதேபோன்று வல்வெட்டித்துறை அம்மன் கோவிலுக்கு முன்பாக ஆரம்பமான பேரணி பொலிகண்டி, பருத்தித்துறை, புத்தூர் ஊடாகப் பயணித்து, நல்லூர் கந்தன் ஆலயவாசலை அடைந்து, பின்னர் அங்கிருந்து தென்மராட்சி, பரந்தன் ஊடாக முள்ளிவாய்க்காலை வந்தடையும்.

இந்தப் பேரணியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் மாத்திரமன்றி சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இணைந்துக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புதுப்பொலிவுடன் உங்கள் ஈஸி24நியூஸ்! | கிருபா பிள்ளை

Next Post

கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்

Next Post
கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்

கமலை வைத்து மதுரை சம்பவத்துக்கு ரெடியான பா.இரஞ்சித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

ஆசிரியர் நியமனம் குறித்து பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு

June 5, 2026
ஜூன் 25 ஆம் திகதி வெளியாகும் கே ஜே ஆரின் ‘அங்கீகாரம்’

ஜூன் 25 ஆம் திகதி வெளியாகும் கே ஜே ஆரின் ‘அங்கீகாரம்’

June 5, 2026
நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகர்கள் சந்தோஷ் – வினோத் கிஷன் நடிக்கும்’ டபுள் ஓக்குபன்சி’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

June 4, 2026
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கோஹ்லி விளையாடமாட்டார், ரோஹித் பங்கேற்பதும் சந்தேகம்

June 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures