Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்

April 3, 2019
in News, Politics, World
0

மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “பொருளாதார வீழ்ச்சி, ஜனநாயக சீர்கேடு ஆகிய இரண்டும் ஆட்சி மாற்றத்தின்போது திருத்தியமைத்து வெற்றிக்கொள்ள வேண்டியதாக காணப்பட்டது.

பொருளாதார எழுச்சியும், தனிமனித ஜனநாயக உரிமைகளும் இன்று முன்னேற்றமடைந்து உறுப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வுறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்த மாறுப்பட்ட அரசியல் கொள்கைகளில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும்.

அத்துடன் அரசியல் தலைவர்கள் தமது பிரதேசத்திற்கு மாத்திரம் வரையறுத்து அபிவிருத்திகளை முன்னெடுக்க கூடாது.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தும் போது பல சவால்கள் காணப்பட்டன. பொருளாதார முன்னேற்றம் மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்தல் ஆகிய இரண்டு அம்சங்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டிய தேவை காணப்பட்டது.

இன்று அரசாங்கத்தின் குற்றங்களை பகிரங்கமாக விமர்சிக்கும் அளவிற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – சி.பி.ரத்நாயக்க

Next Post

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

Next Post

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures