Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள விசேட உத்தரவு!

May 15, 2019
in News, Politics, World
0

அமைதியான சூழலை உருவாக்குவதற்காக மாகாண மட்டத்தில் விசேட வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மாகாண சபைகள் கலைக்கப்பட்டிருந்தாலும் முன்னாள் முதலமைச்சர்களின் பங்களிப்புடன் அனைத்து மாகாண சபைகளையும் மீள அழைக்கப்பட்டு அந்தந்த மாகாணங்களின் பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் குறித்து தொடர்ச்சியான மீளாய்வுகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச ரீதியாக உரியவாறு பாதுகாப்பு குழுக்களை ஒன்று திரட்டி தத்தமது பிரதேசங்களின் பாதுகாப்பையும் அமைதியை பேணவும் பாதுகாப்புத் துறையினருடன் ஒன்றிணைந்து தேவையான தீர்மானங்களையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

கடந்த 12ஆம் திகதி காலி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காலி மாவட்ட பாதுகாப்புக் குழு கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு விடுத்தார்.

நாட்டினுள் அமைதியை பேணுவதற்கு மாகாண ரீதியில் அமுல்படுத்த வேண்டிய விசேட வேலைத்திட்டமொன்றின் தேவை குறித்தும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தினார்.

அத்துடன், பொலிஸார், முப்படையினர், அரசியல் தலைமைகள் மற்றும் மதத் தலைவர்கள் ஆகியோரையும் இந்த வேலைத்திட்டத்தோடு இணைத்துக்கொள்ள வேண்டும் எனவும், நாட்டின் அனைத்து இனங்களுக்கிடையேயும் சமாதானத்தையும் சகவாழ்வையும் உறுதி செய்வதற்கான குறுகிய கால மற்றும் நீண்டகால செயற்திட்டத்தின் தேவையையும் ஜனாதிபதி இதன்போது மேலும் வலியுறுத்தினார்.

Previous Post

ஆட்சியாளர்களுக்கு சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை!

Next Post

அமெரிக்க நடுவானில் இரு விமானங்கள் விபத்து!!

Next Post

அமெரிக்க நடுவானில் இரு விமானங்கள் விபத்து!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures