மலையாள திரையுலகில் கடந்த இரண்டு வருடங்களாக குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் இளம் நடிகரான ஷேன் நிகம். சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், கிஸ்மத் என்கிற படத்தின் மூலம் கதாநாயகனாக மாறினார். அமலா, மஞ்சுவாரியர் இணைந்து நடித்த ‘கேர் ஆப் சாய்ராபானு’ என்கிற படத்தில் மஞ்சுவாரியர் மகனாக நடித்தார்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பஹத் பாசில் நடித்த கும்பளாங்கி நைட்ஸ் என்கிற படம் இவருக்கும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த நிலையில் தமிழில் சீனு ராமசாமி அடுத்ததாக இயக்க உள்ள படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ஷேன் நிகம்.. இந்த தகவலை அவரே ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார். தற்போது மாமனிதன் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் சீனுராமசாமி ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.