மம்முட்டியும், நயன்தாராவும் ராப்பகல், தஸ்கர வீரன், பாஸ்கர் தி ராஸ்கல், புதிய நியமம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இந்தநிலையில் மலையாளத்தில் மம்முட்டி – நயன்தாரா நடிக்க உள்ள புதிய படத்தை விபின் என்பவர் இயக்க உள்ளார். இந்த படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று சொல்லப்பட்டு வந்தது..
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் கால்சீட் ரொம்பவே பிஸியாக இருப்பதால் அவருக்கு மாற்றாக விஜய் ஆண்டனி நடிக்க உள்ளார் என்கிற ஒரு தகவல் கசிந்துள்ளது. அந்தவகையில சமீபத்தில் விஜய்சேதுபதி மலையாளத்தில் நுழைந்தது போல விஜய் ஆண்டனிக்கு இந்த படம் மலையாளத்தில் அறிமுகப் படமாக அமையும் என்றே தெரிகிறது;. இந்த வருடத்தின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது











