முல்லைத்தீவு – முள்ளியவளைப் பகுதியில் காணப்படும் பெருந்தெரு, உட்பட்ட மழை வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட வீதிகள் பலவும் பார்வையிடப்பட்டுள்ளன.
முள்ளியவளை பெருந்தெருவானது, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்களுடைய கோரிக்கையின் பேரில், விசேட ஒதுக்கீடு ஒன்றினூடாக வடமாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தினால் இவ்வருடம் மறுசீரமைப்புச் செய்யப்பட்டிருந்தது.
இந் நிலையில் கடந்த 23 ஆம் திகதி பெருந்தெரு மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, மக்களால் மறுசீரமைப்பு செய்துதரும்படி கோரப்பட்ட வீதிகள் பலவும் பார்வையிடப்பட்டுள்ளன. மேலும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் அவர்கள், .தம்பு – சிவராசலிங்கம் (வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், வடமாகாணம்), வி.முரளிதரன் (பிரதான பொறியியலாளர், கிளிநொச்சி), கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேசுவரன் ஆகியோர் பார்வையிடும்போது பொதுமக்களும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

