மது போதையில் மகிழுந்தை செலுத்திய குற்றத்துக்காக காவல்துறை அதிகாரி ஒருவருக்கு நான்கு மாத சிறைத்தண்டனை வழங்கப்படுள்ளது. தவிர, 18 மாதங்களுக்கு ஆயுதம் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி காவல்துறை அதிகாரி ஒருவரின் மகள் காவல்துறையினரை தொடர்புகொண்டு தனது தந்தை மது போதையில் மகிழுந்தை செலுத்துவதாக தெரிவித்தார். அதன் பின்னர் குறித்த மகிழுந்து Clichy-sous-Bois இல் வைத்து அடையாளம் காணப்பட்டு, மறிக்கப்பட்டது. ஆனால் மகிழுந்து நிற்க மறுத்து தப்பிச்சென்றது. பின்னர் காவல்துறையினர் துரத்திச் சென்று 100 மீட்டர்கள் தொலைவில் வைத்து குறித்த அதிகாரியை கைது செய்துள்ளனர்.
குறித்த அதிகாரி, Seine-et-Marne இல் உள்ள Coulommiers காவல்நிலையத்தில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நேற்று வெள்ளிக்கிழமை குறித்த அதிகாரிக்கு நான்கு மாத சிறைத்தண்டனையும், 18 மாதங்களுக்கு ஆயுதம் பயன்படுத்த தடையும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.