Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்றும் பூமி

October 6, 2018
in News, Politics, World
0

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன.

பூமியின் விட்டம் 12,742 கி.மீ. அதன் சுற்றளவு 40,075 கி.மீ. நிறை 5.9722 x 10^24 கிலோகிராம். இந்த அளவு பெரிய பூமியானது தன்னைத் தானே சுற்றிக்கொள்ள 23 மணிநேரம் 56 நிமிடம் 4.09 நொடிகள் எடுத்துக்கொள்கிறது. அப்படியானால் எந்த அளவு வேகமாக அது சுழலும். நினைத்தாலே தலை சுற்றுகிறதா?

ஆம், பூமி ஒரு மணி நேரத்துக்குக் கிட்டத்தட்ட 1000 மைல், அதாவது சுமார் 1674 கி.மீ எனும் வேகத்தில் சுழல்கிறது. இது ஒரு நொடிக்கு 30 கி.மீ. வேகம். வண்டியில் 80 கி.மீ வேகத்தில் சென்றாலே பறப்பது போல் உணரும் நாம் எப்படி இந்த வேகத்தை உணர முடியவில்லை என்று சிந்தித்துள்ளீரா? காரணம், இதுதான். Frames of reference என்று சொல்லப்படும் குறியீட்டுச்சட்டகம். கண்ணோட்டம் என்று கூட புரிந்து கொள்ளலாம்.
எளிமையாகப் புரியவேண்டுமானால் ஓர் உதாரணம் பார்ப்போம். ஒரு ரயிலை எடுத்துக் கொள்வோம். ரயிலில் பயணிக்கும் போது நாம் எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறோம் என்பதை உணரமாட்டோம். நகர்வதைக் கூட வெளியில் எட்டிப்பார்த்துத் தெரிந்துகொள்வோம். இதில் இரண்டு கண்ணோட்டம் இருக்கும். ஒன்று ரயிலின் உள்ளே இருப்பவரின் கண்ணோட்டம். அவரைப் பொறுத்தவரை, அவர் அப்படியே நிற்பது போலவும், அவரைச் சுற்றி உள்ள நடைமேடை, சுற்றம் எல்லாம் நகர்வது போலவும் தோன்றும். ஏனெனில் இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் ரயிலுடன் இருக்கும்.மற்றொரு கண்ணோட்டம் நடைமேடையில் இருப்பவருடையது. அதில் சுற்றம் எல்லாம் நிலையாய் நிற்க ரயில் நகர்வதாய் அமையும். இதில் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ் நடைமேடையில் நிலைத்து வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் ரயில்தான் நகரும்.

இதன் பெரிய அளவீடே பூமியின் சுழற்சி. அந்த நகரும் ரயில், நம் பூமி. நடைமேடை இங்கு அண்ட வெளி. பூமியிலிருந்து பார்க்கும் போது பூமி நகர்வது போல் தெரியாது. வானம் நகர்வதாய்த் தெரியும். இதில் பூமி ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். வெளியிலிருந்து பார்த்தால், பூமி நகர்வதாய்த் தெரியும். அப்போது வானம் ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு ரயிலைப்போல் இங்குப் பூமிதான் சுழலும். அதுதான் சரியானது.

பூமியின் சுழற்சிக்கும் ரயிலுக்கும் என்ன தொடர்பு?

அதேபோல் ரயிலின் உள்ளே உள்ள காற்றும் நமக்கு வேகத்தைக் காட்டாது. ஏனெனில் ரயிலுக்குள் உள்ள காற்றும் சேர்ந்து ரயிலின் வேகத்துக்குப் பயணிக்கும். அதேபோல நம் வளிமண்டலமும் பூமியோடு சேர்த்து அதன் வேகத்துக்கு நகர்வதால் காற்றின் வேகத்திலும் பூமியின் வேகம் வெளிப்படாது.

ஆனால் ஒரு வித்தியாசம். ரயில் வேகம் எடுத்தாலோ வேகம் குறைந்தாலோ அந்த விசையை நம்மால் உணர முடியும். அதற்குக் காரணம் அடிப்படை இயற்பியல் தத்துவம் `விசை = நிறை * முடுக்கம்‘ (F = m * a ) இதில் நிறை என்பதை ரயிலில் இருப்பவருடைய நிறை. வண்டி நிற்கும் போதும் சீரான வேகத்தில் செல்லும் போதும் முடுக்கம் சுழியமாக இருக்கும் எனில் விசையும் சுழியமாக இருக்கும். அதனால் ரயில் நகர்வது உணரப்படாது. அதே நேரம் வேகம் குறையும் போதோ அதிகரிக்கும் போதோ முடுக்கத்துக்கு அளவீடு வரும்; அதனால் விசை எழும். அதனால் விசையை உணர முடியும்.ஆனால் பூமியில் உடனடியாக வேகம் எடுக்கவோ வேகம் குறையவோ வாய்ப்பில்லை. ஆண்டுக்கு நானோ நொடிகள் (nano seconds) தாமதமாகச் சுழன்றுகொண்டு இருந்தாலும் அது நிகழ நூற்றாண்டுகள் ஆகும். அதனால் திடீர் விசையை நம்மால் என்றும் உணர முடியாது. நாம் சுழன்று கொண்டு இருக்கிறோம் என்பதை நம் வான வெளியில் ஏற்படும் சுழற்சி கொண்டு உறுதிப்படுத்தலாம். நடைமேடை போன்றது அண்டவெளி. அதுதான் சரியான ஃபிரேம் ஆப் ரெஃபரென்ஸ். அங்கு வைத்தால் பூமி சுழல்வது சரியாய் விளங்கும். பூமியோடு சேர்ந்து நாமும் மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுழன்று கொண்டுதான் இருக்கிறோம் நிலையாய் நின்றுகொண்டே. அந்த வேகத்தை நாம் உணரவில்லை என்றாலும் அதன் விசை நம்மீது இருந்துகொண்டேதான் இருக்கிறது.

Previous Post

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீன கடற்படையின் தளமாக மாறலாம்

Next Post

`கடல் நம்பமுடியாத அளவு கடினமாக இருந்தது!’ – 3 நாள் நடுக்கடலில் போராடிய டோமி உருக்கம்

Next Post

`கடல் நம்பமுடியாத அளவு கடினமாக இருந்தது!’ - 3 நாள் நடுக்கடலில் போராடிய டோமி உருக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

July 12, 2026
அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

அரை இறுதிக்கு தகுதிபெறும் குறிக்கோளுடன் நடப்பு சம்பியன் ஆர்ஜன்டீனாவும் சுவிட்ஸர்லாந்தும் மோதவுள்ளன

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures