தங்களுக்கு பிடித்த நடிகர் படங்கள் எப்போது ரிலீஸ் ஆனாலும், அதை ஒரு திருவிழாவாகக் கொண்டாடித் தீர்ப்பது என, தமிழ் திரைப்பட உலகில் இருக்கும் நடிகர்களின் ரசிகர்கள் முடிவெடுத்துச் செயல்படுகின்றனர். அதேநிலை, தமிழ் திரைப்பட உலகில் மட்டுமல்ல… எல்லா சினிமா வட்டாரங்களிலும் இருக்கிறது.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை, தெலுங்கு பட உலகின் சூப்பர் ஸ்டாராக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வரும் 9ல், அவருடைய 44வது பிறந்த நாள் வருகிறது. படம் ரீலீசாகும் நேரம் மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட நடிகர்களின் பிறந்த நாளிலும் கொண்டாடும் போக்கு, இப்போது, எல்லா திரையுலகிலும் இருக்கிறது.
ஆந்திராவில், மகேஷ் பாபுவின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் தற்போது நடந்து வருகின்றன. இது உலகம் முழுவதிலும் இருக்கும் ரசிகர்கள் மத்தியிலும் வியாபித்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருக்கும் ஒரு தியேட்டரில், மகேஷ்பாபு பிறந்த நாளான வரும் 9ல், மாலை நேரக் காட்சி ஒன்றில், ஏற்கனவே மகேஷ்பாபு நடித்து வெற்றி பெற்ற படமான பிசினஸ் மேன் படம், ரசிகர்களுக்காக திரையடப்பட இருக்கிறது.