Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போராடி வீழ்ந்த இந்தியா: ஒரு ஓட்டத்தில் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி

August 28, 2016
in News, Sports
0

போராடி வீழ்ந்த இந்தியா: ஒரு ஓட்டத்தில் வெற்றியை ருசித்த மேற்கிந்திய தீவுகள் அணி

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

2 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடர், பொதுவான இடமான அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில் பார்க் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது.

அமெரிக்காவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அங்கு இந்த போட்டிக்கு (ஆகஸ்ட் 27, 28) ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இன்று நடக்கும் முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி ஆரம்பத்திலே அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தது. தொடக்க வீரரான ஜான்சன் சார்லஸ் 33 பந்தில் 7 சிக்சர், 6 பவுண்டரி என 79 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் இருந்த லெவிசும் இந்திய அணியின் பந்துகளை சிதறடித்தார்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 126 ஓட்டங்கள் சேர்த்தது. தொடர்ந்து விளாசிய லெவிஸ் சதம் அடித்தார். அவர் 49 பந்தில் 9 சிக்சர், 5 பவுண்டரி என 100 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களின் அதிரடியால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஓட்டங்கள் மளமளவென உயர்ந்தது.

பின்னர் வந்த ரஸல் 22 ஓட்டங்களும், அணித்தலைவர் பிராத்வெய்ட் 14 ஓட்டங்களும் எடுத்தனர். சிம்மோன்ஸ் (1) வந்த வேகத்தில் கிளம்பினார்.

20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டு இழப்பிற்கு 245 ஓட்டங்களை குவித்தது. பிராவோ (1), சாமுவேல்ஸ் (1) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய அணி சார்பில், பும்ரா, ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இதனையடுத்து 246 ஓட்டங்கள் வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 7 பந்துகளை சந்தித்து இருந்த நிலையில் ரஸ்ஸல் பந்துவீச்சில் ரஹானே(7) வெளியேறினார்.

ஆனால் மறுபக்கம் துவக்கம் முதலே அதிரடி காட்டினார் ரோகித் ஷர்மா. இதனிடையே ரோகித் ஷர்மாவுடன் களமிறங்கிய விராட் கோஹ்லி 9 பந்துகளை சந்தித்து 16 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிராவோ பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ராஹுல் மற்றும் ரோகித் ஜோடி மேற்கிந்திய தீவுகள் அனியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. 28 பந்துகளை சந்தித்த ரோகித் ஷர்மா 62 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது பொல்லார்ட் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

பின்னர் ராஹுலுடன் ஜோடி சேர்ந்த அணித்தலைவர் தோனி தனது அதிரடி பாணியில் மேற்கிந்திய பந்து வீச்சாளர்களை திக்குமுக்காட செய்தார். ஆனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 244 ஓட்டங்களை மட்டுமே எட்ட முடிந்தது. ராஹுல்(110), தோனி(43) ஓட்டங்கள் குவித்தனர்.

மேற்கிந்திய அணி சார்பில் பிராவோ(2), ரஸ்ஸல் மற்றும் பொல்லாட் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Previous Post

விஷால், காஜல், ஹன்சிகா, ஜி.வி.பிரகாஷ் என அனைவரையும் கலாய்த்து தள்ளிய கவுண்டமணி

Next Post

யாரும் அறியா போல்ட்டின் மற்றொரு பக்கம்? அதிர வைக்கும் தகவல்

Next Post

யாரும் அறியா போல்ட்டின் மற்றொரு பக்கம்? அதிர வைக்கும் தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026
காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி

“டிக் டொக்” மோகம் ; கைப்பேசியைத் தர மறுத்த தங்கையை கொன்ற 14 வயது சகோதரன்!

May 30, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

கட்டுநாயக்கவில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற நட்சத்திர ஹோட்டல் முற்றுகை : மேலாளர் கைது!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures