கொழும்பு – வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
துவிச்சக்கரவண்டியில் போதைப்பொருளுடன் பயணித்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 2 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் மற்றும் ஒரு கிலோ கிராம் ஹஷீஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்