Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பேதங்களை மறந்து அனைவரும் ஜனாதிபதியுடன் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் | சரத் வீரசேகர  

August 5, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கையில் விடுதலைப்புலிகளின் அச்சம் இன்னும் நீங்கவில்லை  –  வீரசேகர

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி பேதங்களை மறந்து  ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த தவறியமையே கோத்தாபய ராஜபக்ஷ் செய்த தவறு என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய கொள்கை விளக்க உரை காலத்திற்கு மிகவும் பொருத்தமானது. நாடு தற்போது எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கு இனம், மதம், கட்சி, பிரதேசம் என அனைத்து பேதங்களையும் கடந்து அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது. நாடு இதற்கு முன்னர் இதுபோன்றதொரு நெருக்கடியை எதிர்கொண்டிருக்கவில்லை என்பதை நாமறிவோம். 

இந்த நெருக்கடி நிலையிலிருந்து மீள்வதற்கு நாட்டின் அனைத்து மக்களும் அனைத்து தரப்பினரும் பங்களிப்புச் செய்ய வேண்டியது அவசியம்.

அத்துடன் அமைதியான போராட்டங்கள் தவிர்ந்த நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகள் தொடருமானால் ஒரு போதும் எம்மால் வெளிநாட்டுச் செலாவணியைப்  பெற்றுக் கொள்ள முடியாமற் போகும்.

அவ்வாறு வெளிநாட்டு செலாவணியை தேட முடியாது போனால் எரிபொருள், சமையல் எரிவாயு உட்பட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையே ஏற்படும்.

அதனால் கடந்தவற்றை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில்  செயற்பட வேண்டிய காலம் இது. 

தமது கொள்கை விளக்க உரையிலும் ஜனாதிபதி அதனையே வலியுறுத்தி இருந்தார்.

அத்துடன் கடந்த காலங்களில் விட்ட தவறுகள் காரணமாகவே நாடு தற்போது இத்தகைய நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனைக் கருத்திற்கொண்டு நாட்டை பொருளாதாரத்தில் கட்டியெழுப்புவதற்கான தலைமைத்துவத்தை புதிய ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள நிலையில் நாம் அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவோம்.

கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி நிலைமையை மக்களுக்கு அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.  கொரோனா வைரஸ் தொற்று சூழ்நிலை காரணமாக  சுற்றுலாத்துறை மூலமாக எமக்கு கிடைக்க வேண்டிய ஐந்து பில்லியன் டொலர்கள்  இல்லாமல் போனது. அதேபோன்று வேறு வழிகளில் நாட்டுக்கு கிடைக்க வேண்டிய ஏழு பில்லியன் டொலர்களும் இல்லாமல் போனது.

அந்த அரசாங்க காலத்திலும் எந்த தடையும் இன்றி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளும் தொடர்ச்சியாக வழங்கப்பட்டே வந்துள்ளன.

கொரோனா தடுப்பூசி மற்றும் மருந்துகள் உட்பட நாட்டிலிருந்து கொரோனா வைரஸ் தொற்றை முற்றாக இல்லாதொழிப்பதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கம் பொறுப்பேற்றது. அது தொடர்பில் மக்களுக்கு அன்றைய அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லையாயினும் மக்கள் அதனை உணர வேண்டும்.

அதனைச் செய்யாமையே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் விட்ட தவறு. கோத்தாபய ராஜபக்ஷவும் தற்போது அதனை உணர்ந்திருப்பார்.

யுத்தத்தை வென்ற எம்மால் பொருளாதார நெருக்கடியையும்  வெல்ல முடியும். அதற்கு மக்களையும் ஒன்றிணைத்துக் கொண்டு செயற்பட்டிருக்க வேண்டும். என்றாலும் அதனை நாங்கள் செய்யவில்லை.

நாடு பெரும் போராட்டத்திற்கு முகம் கொடுத்தது. எவ்வாறெனினும்  ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக்குவதற்காகவா போராட்டம் இடம்பெற்றது என எனக்கு தெரியாது. என்றாலும் இறுதி பெறுபேறு அவ்வாறுதான் ஏற்பட்டது. அந்த பெறுபேற்றுக்கமைய நாங்கள் செயற்டுவோம் என்றார். 

Previous Post

யோகாப் பயிற்சி

Next Post

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

இன்று மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures