விடுதலைப்புலிகளின் கைகளில் கறைபடியாமல் இருந்த ஊடகம் ஒன்று தற்போது ஒரு சாதாரண மனிதனின் கையில் சென்று படாதபாடு படுகிறது ,
புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது நம்பிக்கையான ஊடகமாக மக்கள் மனதில் இருந்த ஊடகம் தற்போது தமிழ்மக்களின் நம்பிக்கைதுரோக ஊடகமாக மாறி இருக்கிறது ,
தற்போது கனடா கலைஞர்களுக்கு வலை விரிக்க புறப்பட்டிருக்கும் இந்த ஊடகம் .கலைஞர் களை ஊடகவியலாளர்களை மதிக்காத ஒரு ஊடகமாக மக்கள் மத்தியில் விமர்சிக்கப் படுகிறது .
இலட்சிய வெறியோடு போர்முரசு கொட்டிய ஊடகத்தை தற்போது தமிழ் மக்களை அழித்து ஒழித்த இலங்கை அரசின் சிங்கள இனவாதிகளுக்கு துதிபோடும் ஊடக மாக மாற்றி இலங்கை மக்களையும் அவர்களின் நம்பிக்கையையும் ஏமாற்றிய ஊடகமாக சிறிலங்கா அரசின் கைக்கூலியாகவும் ஊதுகுழலாகவும் செயற்படும் ஊடகம் தற்போது கனடாவில் வந்து ஏனைய ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் கொச்சைப்படுத்தும் செயற்ப்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம் .

