Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புத்தளம் குப்பை விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரேரணை

March 29, 2019
in News, Politics, World
0

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, புத்தளம் வண்ணாத்தவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது, கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் கொண்டுவந்த பிரேரணை, விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பிரதேச சபை தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள், எந்த சந்தர்ப்பத்திலும் குப்பைத் திட்டத்தை நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியது என தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து, குப்பைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை தொடர்பாக திறந்த வாக்களிப்பு இடம்பெற்றது.

இந்த வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 6 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நால்வரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு 1 உறுப்பினர்கள் தலா ஒவ்வொரும் என 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

அதற்கமைய குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கொண்டுவரப்பட்ட பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த வாக்களிப்பில் நான்கு உறுப்பினர்கள் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

வடக்கில் மின் வாசிப்பாளர்களாக தமிழர்களை நியமியுங்கள் – சிறிதரன் வலியுறுத்து

Next Post

மீள் பரிசீலனை விண்ணப்பங்களை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு!

Next Post

மீள் பரிசீலனை விண்ணப்பங்களை கையளிப்பதற்கான கால எல்லை அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures