Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதன்கிழமையை பொது விடுமுறையாக அறிவிக்காமல் வீட்டிலிருந்து பணிபுரிய வேண்டும்

March 19, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

தற்போதைய சூழ்நிலையில், நாட்டில் எரிசக்தியைச் சேமிக்கும் பொருட்டு, வாரத்தில் புதன்கிழமைகளில் வழங்கப்படும் விடுமுறையை பொது விடுமுறையாக அறிவிக்காமல், அனைத்து அரசாங்க ஊழியர்களும் நிறுவனத் தலைவர்களின் மேற்பார்வையின் கீழ் வீட்டிலிருந்து பணிபுரியும் நாளாக அறிவிக்க வேண்டும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்டப் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரவித்தார்.  

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் நெருக்கடியின் காரணமாக, உலகின் பல நாடுகள் வீட்டிலிருந்து பணிபுரியத் தொடங்கியுள்ளன. 

இலங்கையில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பல அரசாங்க ஊழியர்கள் இந்த நாளைத் தங்களின் தனிப்பட்ட பயணங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். இது எரிசக்தியைச் சேமிக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைய உதவாது.  

அரசு ஊழியர்கள் தங்கள் கடமைகளை வீட்டிலிருந்தே செய்யும் முறைக்கு வழிநடத்தப்பட்டால், அவர்களால் ஆற்றலைச் சேமிக்க முடிவதோடு மட்டுமல்லாமல், நாட்டின் பிற நிர்வாக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளையும் தடையின்றிப் மேற்கொள்ள  முடியும்.  

மேலும், இதுபோன்ற சூழ்நிலைகளில் பொருளாதாரத்தைத் தடையின்றிப் கொண்டு செல்ல ஒரு துரித பொதுச் சேவை அவசியம்.  

இன்று, உலகில் உள்ள பல நாடுகள், தற்போதுள்ள தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைகளைக் கையாளுகின்றன. 

அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்ட பல நிறுவனங்கள், சாதாரண சூழ்நிலைகளில்கூட இந்த முறையைச் செயல்படுத்துகின்றன. 

ஒரு ஊழியருக்கு ஒதுக்கப்பட்ட பணியை வீட்டிலிருந்து செய்ய அனுமதிப்பதன் மூலம், அலுவலகங்களை அன்றாடம் நடத்துவதற்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் செலவைக் குறைக்க உலகின் பல நாடுகள் முயற்சிக்கின்றன. ஒரு நாடு என்ற வகையில்  நாமும் இதுபோன்ற புதிய முறைகளைக் கையாள வேண்டும் என்றார்.

Previous Post

திரித்துவ கல்லூரிக்கான சாதனையை 19 வயதின்கீழ் இலங்கை வீரர் திமன்த மஹாவித்தான நிலைநாட்டினார்

Next Post

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சுந்தர் சி

Next Post
மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சுந்தர் சி

மீண்டும் பேய் படத்தில் நடிக்கும் சுந்தர் சி

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மூலதனச் செலவினத்தை அதிகரிக்கும் நோக்குடன் அடுத்தாண்டுக்கான பொருளாதாரத் திட்டங்கள் தயாரிப்பு |   அநுர

முன்னாள் அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்கள்…! ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

August 3, 2026
ஜனநாயகன் – திரைப்பட விமர்சனம்

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு புது சிக்கல்

August 3, 2026
கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

கிளாஸ்கோவில் கோலூன்றிப் பாய்தலில் சாதிப்பாரா தேசிய சாதனை வீரர் புவிதரன்?

August 2, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

282 கிலோகிராமிற்கும் அதிகளவான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!

August 2, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures