நடிகர் பிருத்விராஜின் மனைவி சுப்ரியா மேனன். பத்திரிக்கை நிருபரான இவரை, பிருத்விராஜ் காதலித்து, திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. இந்தநிலையில் ஏற்கனவே தான் பங்குதாரராக இருந்த ஆகஸ்ட் சினிமாஸ் என்கிற நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிருத்விராஜ் புதிதாக பிருத்விராஜ் புரொடக்சன்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கினார்.
இந்த நிறுவனத்திற்கு தனது மனைவி சுப்ரியாவை முதலாளியாக அமரவைத்து அழகு பார்த்தார். இவர்கள் தயாரிப்பில் முதன்முதலாக உருவாகியுள்ள ‘9’ என்கிற படம் வரும் பிப்ரவரி 7ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் பிருத்விராஜின் மிக நெருங்கிய தோழியான நடிகை பார்வதி, சுப்ரியாவின் முதல் தயாரிப்பான இந்த படத்தை பார்பதற்கு தான் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருப்பதாகவும், திரையுலகில் தொடர்ந்து அவர் நல்ல படங்களை தரவேண்டும் என அவரை வாழ்த்தி வரவேற்பதாகவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.