தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்த ரவிதேஜாவுக்கு, தற்போது நேரம் சரியில்லை என்றே சொல்ல வேண்டும். காரணம் கடந்த வருடம் வெளியான இவரது மூன்று படங்களுமே தோல்வி படங்களாக அமைந்தன. இருந்தாலும் மனதை தளரவிடாமல் தற்போது டிஸ்கோ ராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார் ரவிதேஜா.
இந்த படத்தை வி.ஆனந்த் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்காக தனது சம்பளத்தில் பாதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார் ரவிதேஜா. காரணம் கடந்த வருடம் அவர் நடித்த நெல டிக்கெட் என்கிற படத்தை தயாரித்த ராம் தல்லூரி என்பவர்தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். அவரது சிரமத்தை குறைப்பதற்காகவே தனது சம்பளத்தில் பாதியை விட்டுக் கொடுத்து உள்ளாராம் ரவிதேஜா.