பிரான்சில் இருந்து சிரியாவுக்கு தப்பியோடிய பெண் ஒருவர் சிரியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பிரான்சில் குறித்த பெண் தேடப்பட்டு வந்துள்ளார்.
35 வயதுடைய குறித்த பெண் பிரான்சில் இருந்து சிரியாவுக்கு தனது மூன்று பிள்ளைகளுடன் தப்பிச்சென்றிருந்தார். இவ்வருட மார்ச் மாதத்தில் அவர் இங்கிருந்து சென்றுள்ளார். இத்தாலிய குடியுரிமை கொண்ட இப்பெண் சிரியாவின் Milan நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். துருக்கி-சிரிய எல்லையில் கடந்த சனிக்கிழமை இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். குழந்தைகளை பயங்கரவாதத்துக்கு தயார் செய்தல் உள்ளிட்ட பல வழக்குகள் இப்பெண் மீது தொடரப்பட்டுள்ளது.
பரிஸ் நகர அரச வழக்கறிஞர் அலுவலகம் இந்த வழக்கினை விசாரணைகளுக்கு எடுத்துக்கொண்டுள்ளது. குறித்த பெண் விரைவில் பிரான்சுக்கு அழைத்துவரப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












