விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர் கவினை சந்திக்க வரும் அவரது நண்பரும், திரைப்பட நடிகருமான பிரதீப் ஆண்டனி கவினை அடிக்கும் முன்னோட்ட காட்சி வெளியாகியது.
ஆனாலும் கவினை அறைவதற்கு முன் பிரதீப் கூறிய விடயங்களை எப்பிசாட்டில் தொலைக்காட்சி நிறுவனம் நீக்கி விட்டது .
பிக்பாஸ் 3 நிகழ்ச்சி விஜய் டிவியில் 80 நாட்களை கடந்து ஒளிப்பரப்பாகி வருகிறது. பிக்பாஸ் வீட்டில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இச்சூழலில், இந்த வாரம் முழுக்க, பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்கு வருகை தந்தனர்.
வார தொடக்கத்தில், மலேசியாவை சேர்ந்த பிக்பாஸ் போட்டியாளர் முகேனின் தாய் மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருந்தனர். தொடர்ந்து, லொஸ்லியா, சேரன், வனிதா, தர்ஷன் மற்றும் ஷெரின்,சாண்டி ஆகியோரின் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து போட்டியாளர்களை நலம் விசாரித்தனர்.
இச்சூழலில், போட்டியாளர் கவினை பார்க்க அவரது குடும்பத்தார் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கவினை பார்க்க அவரது நண்பர் பிரதீப் ஆண்டனி மட்டுமே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பது கவினை பெரும் கலக்கத்துக்கு உள்ளாக்கியுள்ளது .கவினுக்கு தாய் வராமைபற்றி,பிரதீப் என்ன கூறினார் என்பதுதொடர்பான உரையாடல்களும் எடிட் செய்யப்பட்டுள்ளது .