Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் ரணிலின் வெளிப்படைத்தன்மை வரவேற்கத்தக்கது | அமெரிக்கத் தூதுவர்

June 13, 2022
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைக்கான அமெரிக்க த்தூதுவராக ஜுலி சங் பதவிப்பிரமாணம்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கம் நிலையில், இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர்வசம் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.

குறிப்பாக அவர் தற்போதைய நெருக்கடி குறித்து நாட்டுமக்களிடம் வெளிப்படையாகப் பேசுகின்றார். இவ்வாறு பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எதிர்வருங்காலங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவது வரவேற்கத்தக்கதாகும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி, புதிய பிரதமர் நியமனம் குறித்த நிலைப்பாடு, பொதுமக்களின் எதிர்பார்ப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை தற்போது கடினமானதொரு சூழ்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்றது. அண்மையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறைச்சம்பவங்கள் ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர்ச்சியடைச்செய்தது.

பொதுமக்களுக்கு எதிராகவோ, அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராகவோ அல்லது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் வகையிலேயே கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைகள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாதவையாகும். 

இப்போது நாட்டுமக்கள் கட்டமைப்பு ரீதியான மாற்றமொன்றைக் கோருகின்றார்கள். இதுகுறித்து அண்மையகாலத்தில் ஆளுந்தரப்பு, எதிர்த்தரப்பு பிரதிநிதிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தைகளின்போது அவர்களனைவரும் வெவ்வேறு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்றார்கள்.

இருப்பினும் நிலைபேறானதும், ஸ்திரமானதுமான அரசியல் கட்டமைப்பையும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளையுமே மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்பதை நாம் கூறவிரும்புகின்றோம்.

 இலங்கையுடன் அமெரிக்கா நீண்டகாலமாக நல்லுறவைப் பேணிவருவதுடன், மக்களுக்கும் மக்களுக்கும் இடையிலான தொடர்பு, கல்விசார் தொடர்பு, வணிகம்சார் தொடர்பு உள்ளடங்கலாக இருநாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைசார்ந்த தொடர்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

அதுவே எமது இலக்காக இருப்பதுடன், இலங்கையின் வெற்றியை எமது வெற்றியாகப் பார்க்கின்றோம். ஆகவே இலங்கை நிறைபேறானதும், வெற்றிகரமானதுமான ஜனநாயக நாடாகத் திகழவேண்டும் என்றே நாம் விரும்புகின்றோம். 

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர்வசம் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது.

அந்தவகையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிதிக்கட்டமைப்புக்கள் மற்றும் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள், பொருளாதார மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட தொடக்க நடவடிக்கைகள் திருப்தியளிப்பவையாக உள்ளன.

அதுமாத்திரமன்றி பிரதமர் தற்போதைய நெருக்கடி குறித்து நாட்டுமக்களிடம் வெளிப்படையாகப் பேசுகின்றார். இவ்வாறு பிரச்சினைகள் மற்றும் அதற்குரிய தீர்வுத்திட்டங்கள் தொடர்பில் எதிர்வருங்காலங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பேசுவது வரவேற்கத்தக்கதாகும் என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

அவுஸ்திரேலியாவினால் இலங்கைக்கு உதவக் கூடிய வழிமுறைகள் குறித்து ஆராய்வு

Next Post

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

Next Post
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க இயலாது : இந்திய மத்திய அரசு

இலங்கை பெற்ற கடனை செலுத்தும் பொறுப்பை ஏற்ற இந்தியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures