Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரதமர் கிளிநொச்சிக்கு 2 மணிக்கு வருகைதருவார்

December 28, 2018
in News, Politics, World
0

வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாட்டங்களின் வெள்ள அனர்த்த நிலைமைகளை பார்வையிட பிரதமர் ரணில் விக்ரமசிங்க அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணியளவில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ள நீர் வழிந்தோடிவரும் நிலையில், மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் மீண்டும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் அடைமழை காரணமாக, இதுவரையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22569 குடும்பங்களைச் சேர்ந்த 70650 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1642 குடும்பங்களைச் சேர்ந்த 5379 பேர் 17   முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் 9574 குடும்பங்களைச் சேர்ந்த 30499 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில்  1566 குடும்பங்களைச் சேர்ந்த  4889 பேர் 11 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்தோடு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமையவும் அவர்களுக்கான உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழ் மக்களின் நலன்களை நிறைவேற்ற கூட்டமைப்பு தவறியுள்ளது: நாமல் சாடல்

Next Post

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம்

Next Post

தென்கிழக்கு பல்கலைக்கு மருத்துவ பீடம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures