Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பிரஜாவுரிமை விவகாரத்தால் மோதிக்கொண்ட பேச்சாளர்கள்!

October 21, 2020
in News, Politics, World
0

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவில் உள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்தால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர்கள் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

கொழும்பு, நாரஹேன்பிட்டியில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் இந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்றுக் காலை நடைபெற்றது.

இதில் அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ள சந்தர்ப்பம் அளிக்கப்படாத போதிலும் தொலைபேசி வாயிலாகக் கேள்விகளைத் தொடுப்பதற்குச் சந்தர்ப்பமளிக்கப்பட்டது.

இதன்போது 20ஆவது திருத்தத்தில் உள்ள சில யோசனைகளை நாடாளுமன்றப் பெரும்பான்மை பலத்துடனும் அதேபோல் சர்வஜன வாக்கெடுப்புடனுமே நிறைவேற்ற வேண்டும் என்கின்ற வியாக்கியானத்தை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இவ்விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, 20ஆவது திருத்தத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை பற்றிய விடயம் குறித்து தெளிவுபடுத்தினார்.

“இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரம் யாருக்காக உள்ளடக்கப்பட்டது என்று கேள்வி கேட்கும் பிரிவினர், யாருக்காக அது நீக்கப்பட்டது என்பதையும் கேட்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

“இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் பதவிகளை இந்த நாட்டில் வகிக்கலாமா? இல்லையா? என்பதை சர்வஜன வாக்கெடுப்பில் கேட்க வேண்டும் என்றால் அதற்கு மக்கள்தான் பதிலளிக்க வேண்டிவரும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது குறுக்கீடு செய்து கருத்து வெளியிட்ட அமைச்சரவை இணைப் பேச்சாளரான அமைச்சர் உதய கம்மன்பில, தேசிய சுதந்திர முன்னணி, புதிய ஹெல உறுமய மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் அண்மையில் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் எழுதிய கடிதம் குறித்து நினைவுபடுத்தினார்.

இரட்டைப் பிரஜாவுரிமையை கொண்டு அரசியல் செய்யமுடியாது என்பதை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் சுட்டிக்காட்டியிருந்ததாகத் தெரிவித்த அவர், அமைச்சரவையிலும் இது பற்றி நீண்டநேர பேச்சுக்கள் நடத்தப்பட்டன எனவும், அதில் ஒரு சில பிரிவுகள் குறித்து இணங்கிய போதிலும் இன்னும் இந்த விவகாரம் பற்றி இழுபறி நிலை உள்ளதையும் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார்.

Previous Post

சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடிக் காலம் நீடிப்பு!!

Next Post

கரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Next Post

கரு ஜயசூரிய விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026

Recent News

அரசாங்கத்திற்கு மகிந்தவின் சாட்டையடி பதில்!

விசாரணைக்கு வந்த மகிந்தவின் மகன் யோஷிதவின் மற்றுமொரு வழக்கு!

July 18, 2026
நடிகர் அர்ஜுன் நடிக்கும் ‘பிளாஸ்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அருள்வான் – திரைப்பட விமர்சனம்

July 17, 2026
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமைதியின்மை ஏற்பட்டதுடன் கூட்டம் ஒத்திவைப்பு

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களை எவ்வாறு நடத்துவது என எனது காலத்தை பாருங்கள் – டக்ளஸ்

July 17, 2026
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

நான் சண்டியன் இல்லை | அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

July 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures