‘நந்தா’, ‘மௌனம் பேசியதே’ ஆகிய படங்களை தயாரித்த அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய பட தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது . இதில் தமிழ் சினிமாவின் முத்திரை பதித்த முன்னணி பிரபலங்களான இயக்குநர்கள் பாலா -சசிகுமார்- அமீர்- ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படத்தின் பணிகளை தொடங்கி வைத்தனர்.
அறிமுக இயக்குநர் இராம். நா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தை அபராஜீத் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கணேஷ் ரகு தயாரிக்கிறார். வாஞ்சிநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினரால் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இயக்குநர்கள் எஸ் ஏ சந்திரசேகர், சேரன், கரு. பழனியப்பன், தயாரிப்பாளர் டி. சிவா, நடிகை திருமதி பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.













