திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார் சமந்தா. அவர் நடித்துள்ள சீமராஜா, யுடர்ன், சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கின்றன. அதோடு, தனது கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் ஒரு படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் சமந்தா.
இந்தநிலையில், அடுத்தபடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார் சமந்தா. இந்தப்படம் தென்கொரியாவில் வெளியான ஒரு படத்தை தழுவி எடுக்கப்பட இருக்கிறது. இதில் சமந்தா 70 – 80 வயது மூதாட்டி வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.